புதுப்பெண்ணின் நிர்வாண போட்டோ – காதலனை பிரிக்க காதலி செய்த சதிச்செயல்

 

தன்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அந்த தம்பதிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பிரித்துவிட காதலி செய்த சதிச்செயல் அம்பலமாகியிருக்கிறது.

திருவனந்தபுரத்தில் திருமணம் ஆன புதுப்பெண்ணின் நிர்வாண புகைப்படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சமூக வலைத்தளங்களில் பரவி வந்திருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மார்பிங் செய்து அந்த படங்கள் வெளியிடப்படுகின்றன என்று தெரியவந்தது. இதைச் செய்தது யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கிய போது, வாட்ஸ்அப் எண்ணைக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த வாட்ஸ் அப் எண் மிபின் ஜோசப் என்பவர் உடையது என தெரிய வந்திருக்கிறது.

அவரிடம் துருவித்துருவி விசாரித்தபோது அவர் சவுமியா என்ற இளம்பெண்ணை கை காட்டியிருக்கிறார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் தான் சௌமியாவின் முன்னாள் காதலன் என்று தெரியவந்திருக்கிறது.

தன்னை காதலித்துவிட்டு தன்னிடம் நிறைய பணமும் வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தராமலும் வேறொரு பெண்ணை திடீரென்று திருமணம் செய்துகொண்டதால் காதலனை பழிவாங்க வேண்டும். அதற்கு கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வர வேண்டும். திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு இருவரும் விவகாரத்து பெற வேண்டும். அதற்கு என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று யோசித்து காதலன் திருமணப் பத்திரிக்கையில் இருந்த பெண்ணின் போட்டோவை எடுத்து மிபின் ஜோசப் இடம் கொடுத்தேன். அவர் மார்பிங் செய்து நிர்வாண புகைப்படம் ஆக மாற்றி கொடுத்தார்.

ஹோமியோபதி கிளினிக்கில் ரிசப்ஷனிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த போது மிபின் ஜோசப் அறிமுகமானார். ஒரு வருடமாக அவர் வேலை இல்லாமல் இருக்கிறார் . இதனால் எனக்கு இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி உதவினார். எனக்கு போலி முகநூல் அக்கவுண்ட் ஓபன் செய்து கொடுத்தார். போட்டோவை மார்ஃபிங் செய்து நிர்வாண போட்டோக்களாக மாற்றிக் கொடுத்தார். அதை பதிவேற்றவும் உதவி செய்தார் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதையடுத்து மிபின் ஜோசப் சௌமியா இருவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Contact Us