கணவருக்கு தெரிந்துவிட்டது; என்னை எங்காவது கூட்டிச்சென்றுவிடு அடம்பிடித்த பெண்ணை கத்தரிக்கோலால் மாணவன் செய்த கொடூரம்

 

என் கணவருக்கு நம்முடைய விவகாரம் தெரிந்துவிட்டது . இதனால் தகராறு ஏற்பட்டு விட்டது. அதனால் நான் உன்னுடனே வந்துவிடுகிறேன். என்னை எங்காவது கூட்டிச் சென்று விடு என்று சொல்லி அடம் பிடிக்கவே, ஆத்திரத்தில் கத்தரிக்கோலை எடுத்து சரமாரியாக குத்திக் கொலை செய்து, பின்னர் தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடியிருக்கிறார் கல்லூரி மாணவர். இளம்பெண் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியில் லாலு கான் அப்ரீனா கானம்(28) தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த 19 ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்த அப்ரீனா கானம் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டு உடலில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் கணவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

சம்பவத்தன்று தனக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் போலீசார் கணவர் தான் மனைவியை கொலை செய்து விட்டார் என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.

அப்போது போலீசார் துருவித் துருவி லாலுகானிடம் விசாரித்தபோது, நீ கொலை செய்யவில்லை என்றால் வேறு யார் கொலை செய்திருப்பார்? உனக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா? என்று போலீசார் கேட்க, என் மனைவிக்கு அவருடைய உறவு ஒரு பையனுடன் கள்ள உறவு இருந்தது. 17 வயது கல்லூரி படிக்கும் அந்த சிறுவனுடன் கள்ள உறவு இருந்து வந்தது. இதைக் கண்டுபிடித்து விட்டேன்.

இதனால் நான் மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரை திட்டிவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு நான் வேலைக்கு வந்து விட்டேன். அதன் பின்னர் இந்த கொலை நடந்திருக்கிறது. அதனால் அந்த சிறுவன் மீது தான் தனக்கு சந்தேகம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகவே பேசியிருக்கிறார். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் அந்த சிறுவன் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். திடீரென்று எனக்கு போன் செய்து அழைத்த அப்ரீனா கானம் , நம் விஷயம் கணவருக்கு தெரிந்து விட்டது .அதனால் தகராறு ஏற்பட்டு விட்டது. இனிமேலும் இங்கே இருக்க கூடாது . அதனால் என்னை அழைத்துக்கொண்டு எங்காவது சென்று விடு. நான் உன்னுடனே வந்து விடுகிறேன் என்று சொன்னார். அதற்கு நான் மறுத்தேன்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரப்பட்ட அப்ரீனா கானம், கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு எனது குத்த வந்தார். என்னை குத்தி கொலை செய்து விடுவாரோ என்ற பயத்தில் கத்திரிக்கோலை பிடுங்கி அதேவேகத்தில் அவரை குத்திவிட்டேன். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர் உடலிலிருந்த ஆடையில் தீவைத்துக் கொளுத்தி விட்டேன். அதன்பின்னர் தப்பிக்க வைத்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.

Contact Us