காதலிப்பது போல நடித்து காம விருந்து நடத்திய நண்பர்கள் கூட்டம் -18 வயதான பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

 

மத்தியப் பிரதேச மாநிலம் மோர்கேனாவில் உள்ள ராம்பூர் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண்ணை ,ஒரு அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் காதலித்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி அவரின் வீட்டிலிருந்து கடத்தி சென்றார் .
அப்போது அவருடன் பூரா ஜாதவ், லக்பதி ஜாதவ், வினோத் குஷ்வா மற்றும் சமீர் குஷ்வா ஆகியோர் சென்றனர் . அவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் வசிப்பவர்கள்.
அங்கிருந்து அவர்கள் மூலம் அந்த பெண் சிவபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அதன் பின்னர் அந்த பெண்ணை அவரின் காதலன் உள்பட நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்தனர் .இந்த சம்பவத்திற்கு பிறகு
குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் அவரை விட்டு விட்டு ஓடி விட்டனர் .அதன் பிறகு அந்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அவர்கள் அந்த பெண்ணை அழைத்து சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர் .பின்னர் போலீசார் அந்த பெண்ணை அழைத்து கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காமிக்க சொன்னார்கள் .அதில் இருவரினை மட்டும் அந்த பெண் அடையாளம் காமித்தார் .அதன் பிறகு அந்த குற்றவாளிகள் அக்டோபர் 20 அன்று ராஜ்கோட்டில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Contact Us