மகாராணி நிலை கவலைக் கிடம் : ஆனால் மறைக்கும் மாளிகை அதிகாரிகள் உண்மை என்ன ?

பிரித்தானிய மகாராணியார் நிலமை சற்று மோசமாக உள்ளதாகவும். கடந்த 24 மணி நேரம் அவர் வைத்தியசாலை சென்று வந்த விடையத்தை கூட மாளிகை அதிகாரிகள் மறைத்து விட்டார்கள். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த மீடியாக்கள் கடுமையாக அதிகாரிகளை சாடி செய்திகளை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஸ்காட் லாந்து தேசத்தில் நடைபெறவுள்ள மிகப் பெரிய மாநாட்டில் மகாராணியார் கலந்து கொள்வார இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் கிங்ஸ் எட்வாட் மருத்துவமனை சென்று அங்கே 24 மணி நேரம் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அது போக…

அவருக்கு என்ன வருத்தம் என்பது தொடர்பாக மாளிகை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்ட அதே நேரம். வைத்தியரின் அறிக்கைக்காகவும் முடிவுகளுக்காகவும் தாம் காத்திருப்பதாக கூறி தப்பி விட்டார்கள். உண்மையில் மாகாராணியாரின் நிலை என்ன ? என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளது.

Contact Us