விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… அதிரடியான டிரைலர் இதோ…!!!

 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.

மேலும் தமன் இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எனிமி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.

Contact Us