“காப்பகத்தில் வீசிய துர்நாற்றம்!”.. பார்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

 

கனடா நாட்டிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மன்ட் நகரில் இருக்கும் ஒரு காப்பகத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த ஒரு நபர், துர்நாற்றம் வீசும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த காப்பகத்தின் வேலியின் அருகில் பொருட்கள் இருக்கும் அறை ஒன்றில் ஒரு நபரின் சடலம் கிடந்திருக்கிறது. அவர் இறந்து பல நாட்கள் ஆகி இருந்ததால் உடல் அழுகி சேதமடைந்து கிடந்திருக்கிறது. இதனால் அதிர்ந்து போன அந்த நபர் பதறியடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து, இரவு நேர சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

காவல்துறையினர் உடனடியாக காப்பகத்திற்குள் சென்று அந்த சடலத்தை கைப்பற்றியுள்ளனர். இறந்து கிடந்த நபர் யார்? என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. அந்த நபர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us