‘100 யூரோ வழங்கப்படும்’…. மகிழ்ச்சியில் மக்கள்…. பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

 

கார் அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உட்பட சுமார் 34 மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு பணவீக்க உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாத இறுதியில் இருந்து வணிக ஊழியர்களுக்கு முதலில் பணம் வழங்கப்படும். அதன் பின்பு அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸ் பிரதமர் Jean Castex கூறியதாவது “குறிப்பாக 100 யூரோக்கு வரி விலக்கு அளிக்கப்படும். இதனால் அரசுக்கு 3.8 மில்லியன் யூரோ செலவாகுமாம். இருப்பினும் இது எரிபொருள் வரியை விட மிகவும் குறைந்த செலவுதான்.

மேலும் உலக அளவில் எரிபொருளின் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 2022ஆம் ஆண்டு வரை வீட்டு எரிவாயு பொருளின் விலை உயர்வாக இருக்கும். இதனையடுத்து பிரான்சில் சுமார் 13 மில்லியன் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் 100 யூரோக்களை பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது பிரான்சில் டீசல் ஒரு லிட்டர் 1.56 யூரோ உயர்ந்துள்ளதாகவும் மேலும் பெட்ரோல் லிட்டருக்கு 1.62 யூரோ உயர்ந்துள்ளது என பிரபல பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us