இரண்டு பெண்களுடன் நாலு ஆண்கள் உல்லாசம் -மசாஜ் சென்டருக்குள் நடந்த பலான லீலைகள்

 

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் நாளுக்கு நாள் குவிந்து வருகின்றனர் .இதனால் அங்கு சுற்றுலாவுக்கு வரும் வாலிபர்களை குறி வைத்து, ஆன்லைன் விபசாரம், கஞ்சா விற்பனை ஜரூராக நடக்கிறது. குறிப்பாக ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில் அமோகமாக நடந்து வருகிறது..இது குறித்து அங்குள்ள காவல் துறைக்கு ஏராளமான புகார் சென்றது.
அதனால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு இயங்கிய ஸ்பா, மசாஜ் சென்டர்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு ஒரு மசாஜ் சென்டரில் இரண்டு பெண்களுடன் நான்கு ஆண்கள் உல்லாசமாக இருந்ததால் போலீசார் அந்த பெண்களையும் ,நான்கு வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர். மேலும் மற்ற மசாஜ் சென்டரில் இருந்த 10 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பிறகு அந்த மசாஜ் சென்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய கோரி, போலீஸ் சார்பில் புதுச்சேரி நகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதுச்சேரி நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில், புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், 2 மசாஜ் சென்டர்களை நேற்று மதியம் பூட்டி சீல் வைத்தனர். இரு மசாஜ் சென்டர்களின் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Contact Us