தூங்கிய கணவனை பார்த்து ஏங்கிய மனைவி -அடுத்து என்ன செஞ்சார் தெரியுமா ?

 

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சிவமொக்காவின் மூடாஜே விவேக் நகரை சேர்ந்தவர் 36 வயதான நாகராஜ் என்பவரும் அதேப்பகுதியை சேர்ந்த 34 வயதான மம்தா என்பவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நாகராஜ் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார் .அதனால் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் அவர் தினமும் குடித்து விட்டு போதையில் தூங்கி விடுவார் .இதனால் அவரின் மனைவி மம்தா அதே பகுதியில் வசிக்கும் சில டீனேஜ் வாலிபர்களை நண்பராக்கி கொண்டார் .மேலும் ஒருவருடன் கள்ள உறவிலும் ஈடுபட்டார் .இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவர் நாகராஜுக்கு தெரிய வந்தது. அதனால் அவர் மம்தாவிடம் இந்த கள்ள உறவினை விடுமாறு கூறினார் .இதனால் கோபமுற்ற அந்த மம்தா தன்னுடைய கணவரை அந்த டீனேஜ் வாலிபர்களோடு சேர்ந்து அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.பின்னர் அவர்களோடு சேர்ந்து தூக்கில் தொங்க விட்டார் .அதன் பிறகு அவரின் உறவினர்களிடம் குடிபோதையில் தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார் .பின்னர் நாகராஜின் உறவினர்கள் நாகராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கூறினர் .போலீசார் அவரின் பிரேதத்தை பரிசோதனை செய்த போது அது கொலை என்று கண்டுபிடித்தனர் .பின்னர் அவரின் மனைவி மம்தா கொலை செய்ததை விசாரணையில் கண்டறிந்து நாகராஜின் மனைவி மம்தா, குமார், தினகரன் மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்

Contact Us