ஆன்லைன் கேம் மோகத்தால் பறிபோன 2 உயிர்கள்… அக்காவை கொன்ற தாயை கொலைசெய்த சிறுவன்!

 

ஆன்லைன் விளையாட்டுக்களால் தினந்தோறூம் உயிர்கள் பறிபோவது தொடர்கதையாகி வருகிறது. ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருப்பதால் பெற்றோர்கள் திட்டுகிறார்கள் என பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் ஆந்திராவில் நிகழ்ந்திருப்பது கொலை. மகள் கேம் விளையாடிக் கொண்டே இருந்ததால் பெற்ற தாயே மகளை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். கடப்பா நாகாஷ் பகுதியைச் சேர்ந்தவர் குர்ஷிதா. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்துவந்தார்.

இவருடைய மகன் ஜமீர்(11), மகள் அலிமா (14) இருவரும் குர்ஷிதாவுடன் வசித்து வந்தனர். மகள் அலிமாவுக்கு ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் அதிலியே அலிமா மூழ்கியிருக்கிறார். இதனால் குர்ஷிதா அலிமாவை திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் அம்மாவின் பேச்சை கேட்காமல் அலிமா கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த குர்ஷிதா அலிமாவை தாக்கி அவரின் கழுத்தில்ல் துப்பட்டாவை சுற்றி இறுக்கியுள்ளார்.

இதில் அலிமா பரிதாபமாக உயிரிழந்தார். தாயும் அக்காவும் விளையாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டிருந்த ஜமீர், அலிமா சுருண்டு விழுந்தவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். அக்காவை கொன்ற ஆத்திரத்தில் அருகிலிருந்து கத்தியை எடுத்து குர்ஷிதாவின் கழுத்தில் மாறி மாறி குத்தியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் மிதந்த குர்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஜமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Contact Us