“குழந்தை கத்திட்டிருக்கு ,என்னை விடுங்கடா” -பெத்த பிள்ளை முன்பே பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

 

ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபலாஜி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் 35 வயது பெண்ணொருவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையோடு கடந்த வாரம் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது அந்த இரவு நேரத்தில் அந்த வழியே மூன்று வாலிபர்கள் ஒரு பைக்கில் வந்து கொண்டிருந்தனர் .அப்போது அந்த நபர்கள் அந்த பெண் தனியே வருவதை கண்டு அவரை கடத்தி சென்று கற்ப்பழிக்க திட்டமிட்டனர் .
அதனால் அவர்கள் அந்த பைக்கை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு ,அந்த பெண்ணை வயிற்றில் தாக்கினர் .அந்த தாக்குதலில் நிலை குலைந்த அந்த பெண் அந்த இடத்திலேயே வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தார் .அவரின் கையிலிருந்த குழந்தை மற்றொரு பக்கம் விழுந்து ,அழுது கொண்டிருந்தது .அப்போது அந்த மூவரும் அந்த இடத்திலிருந்த ஒரு வயல்வெளிப்பக்கம் அந்த பெண்ணை இழுத்து சென்றனர் .பிறகு அவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .அப்போது அந்த குழந்தை அந்த காட்சியை கண்டு அழுது துடித்தது .அப்போது அந்த பெண் தன்னுடைய குழந்தை அழுவதை கண்டு அந்த நபர்களிடம் தன்னை விடுமாறு கெஞ்சினார் .ஆனால் அவர்கள் அந்த பெண்ணை விடாமல் கொடுமை செய்து பலாத்காரம் செய்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணின் முடியை வெட்டி ஆறு மணி நேரத்திற்கு பிறகு அனுப்பி விட்டனர் .பிறகு அந்த பெண் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை தனது சகோதரனிடம் கூறினார் .அவர் அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்து ,மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .

Contact Us