பூமியின் அதிசயம்: உண்ணக் கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு இது தான் …

இந்த மண்ணின் சுவையை நீங்கள் உணர வேண்டுமா, நீங்கள் நிச்சயம் அங்கே செல்ல வேண்டும் என்று, ஈரானின் ஹோமுஸ் தீவில், உள்ள சுற்றுலா வழி காட்டி சொல்லியுள்ளார் என்றால் சற்று யோசிக்க வைக்கிறது அல்லவா ? வாருங்கள் பார்கலாம்… பாரசீக வளைகுடாவின் அடர் நீல, நீரின் மத்தியில் ஈரானின் கடற்கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தான், ஹோமுஸ் என்னும் தீவு. இது கண்ணீர் துளி வடிவில் இருக்கும். பளபளப்பான உப்பு குவிமாடம். 70 க்கும் மேற்பட்ட தாதுக்கள் இங்கு காணப்படுகின்றன. ஹோமுஸ் தீவின் 42 பிரமிப்பூட்டும் சதுர கிலோமீட்டரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு அங்குலமும் அதன் உருவாக்கம் பற்றிய கதை மிகவும் பரபரப்பான விடையம் தான்…

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல்கள் பாரசீக வளைகுடாவின் விளிம்புகளைச் சுற்றி அடர்த்தியான உப்பு அடுக்குகளை உருவாக்கியது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த அடுக்குகள் படிப்படியாக அந்த பகுதியில் உள்ள கனிமங்கள் நிறைந்த எரிமலை வண்டலுடன் மோதி, ஒன்றோடொன்று இணைந்தன, இதனால் வண்ணமயமான நிலப்பரப்பு உருவாகியுள்ளது.கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில், உப்பு அடுக்குகள் எரிமலை வண்டலின் பிந்தைய அடுக்குகளால் மூடப்பட்டன. உப்பு மிதமானதாக இருப்பதால், காலப்போக்கில், மேல்புற பாறைகளில் உள்ள விரிசல்கள் மூலம் மேற்பரப்பை அடைந்து உப்பு குவிமாடங்களை உருவாக்கியது.

இயற்கையே செய்த இந்தப் புவியியல் ஒப்பனை காரணமாக பழுப்பு படிந்த நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள், உப்பு குகைகள் உருவாகியுள்ளன. இந்த வண்ண மயமான கலவையின் காரணமாக ஹோமுஸ் தீவு பெரும்பாலும் “ரெயின்போ தீவு” என்று அழைக்கப்படுகிறது. இங்கே கிடைக்கும் ஹெமாடைட் என்னும் தாது… இது தொழில்துறையில் மதிப்புமிக்க தாது மட்டுமல்ல, உள்ளூர் உணவு வகைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. டாம்ஷி என்று அழைக்கப்படும் உள்ளூர் ரொட்டியுடன் உண்ணப்படும் தொடுகறிகளுக்கு ஒரு மண்வாசனையுடனான சுவையை இது அளிக்கிறது.

சிவப்பு மண் தொட்டுக் கொள்ளும் ஒரு சாஸாக பயன்படுத்தப்படுகிறது. இங்கே பெரும்பாலும் உள்ள அனைத்து மண் மற்றும் மலைகளில் இருந்து கிடைக்கும் பல தாதுக்களை உண்ண முடியும்.

 

Contact Us