சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா? தெருப் பொறுக்கும் இந்தியா …

சீனாவுடனான இந்தியாவின் நீண்டகால பதற்றம் குறையவில்லை. கூடவே திபெத்திய பிராந்தியத்தில் உள்ள மூன்று விமான நிலையங்களில் சீனா தொடர்ந்து துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக விமானப்படை தலைவரே தற்போது கூறியுள்ள விடையம், அனைவரது கவனத்தையும் ஈத்துள்ளது. இது இவ்வாறு இருக்க, இந்திய விமானப்படை அடுத்த 10௧5 ஆண்டுகளில், நிர்ணயிக்கப்பட்ட 42 போர் படைப்பிரிவுகளின் வலுவை அடைவது சாத்தியம் இல்லை என்ற விமானப்படையின் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.செளத்ரியின் அறிக்கை, அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது. ஆனால் அடுக்கடுக்காக பல போர் விமானங்களை செய்து குவித்து வருகிறது சீனா. அதுவும் ஸ்டெலத் ரக விமானம் ஆளில்லா விமானம், என்று பல தரப்பட்ட போர் விமானங்களை சீனா குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா எப்படி சீனாவை தாக்குப் பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய விமானப்படையில் சுமார் 600 போர் விமானங்கள் உள்ளன. இதில் சுகோய், மிக் ௨9, மிராஜ் 2000, ஜாகுவார், மிக் ௨1, தேஜஸ் மற்றும் ரஃபேல் ஆகியவை அடங்கும். பிரான்சுடன் செய்துகொள்ளப்பட்ட 36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை 26 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மிக், மிராஜ் போன்ற விமானங்கள் 1990ம் ஆண்டு ரக விமானங்கள், மிக மிக பழையவை. சீனாவிடம் 3,100 போர் விமானங்கள் உள்ளது. இதில் 2100 பேர் விமானங்கள் அதி நவீன போர் விமானங்கள். இதில் வெறும் 600 பழைய போர் விமானங்களை வைத்துக் கொண்டு இந்தியா என்ன செய்யப் போகிறது ? போர் என்று ஒன்று ஆரம்பித்தால், சீனா குண்டு மழை பொழிந்தே இந்தியாவை அழித்து விடும் என்பதே உண்மை நிலை.

இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளதா என்ற கவலை மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. சீனாவின் ஆயுத பல தொடர்பாக அமெரிக்காவே தற்போது குழப்பத்தில் உள்ளது. போர் ஒன்று வெடித்தால், இந்தியா நிச்சயம் வேறு நாடுகளின் உதவியை நாடவேண்டிய சூழ் நிலையில் தான் உள்ளது. இதுவே உண்மை நிலை ஆகும்.

Contact Us