துப்பாக்கி BIN-BAG என்று கடையில் புகுந்து கொள்ளையடிக்க வந்த 2 நபர்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்

ஒரு மாலை நேரம் பிசி இல்லாத எரி பொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்குள், திடீரென 2 இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள். முக கவசம் அணிந்த அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கி. மற்றவர் கையில் பின் பாக். ஏன் என்றால் காசு மற்றும் சிகரெட்டை அள்ளிச் செல்ல ஏதுவாக பாக் ஒன்றையும் கொண்டு வருகிறார். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத விடையம். அங்கே தாடி ஒன்றுடன் நின்றிருந்த மற்றைய மனிதர் தான். நாம் பார்த்த உடனே யாரையும் எழிதில் எடை போடக் கூடாது என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணம் ஆகும். கையில் துப்பாக்கியோடு வந்த அந்த இளைஞர், கடையில் முதலில் தாடியோடு நின்றிருந்த மனிதரை நோக்கி தூப்பாக்கியை குறிவைக்கிறார். ஏன் என்றால் அவரை மிரட்டி முதலில் வெளியே அனுப்ப.. ஆனால் அன் நபர்…

அமெரிக்க ராணுவத்தின் சீல் பிரிவில் வேலை பார்க்கும் நபர் என்பது இவர்களுக்கு தெரியாது. மேலும் சொல்லப் போனால் துப்பாக்கியை கொண்டு எமது எதிரிக்கு அருகே செல்லக் கூடாது. காரணம் , அந்த துப்பாக்கி பறி போகவும் கூடும். மின்னல் வேகத்தில் செயல்பட்ட வீரர், இளைஞர் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்க. பின் பாக்கோடு வந்தவர் பதறி அடித்து ஓட, இந்த கொள்ளைச் சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. 32 வயதாகும் ஜேம்ஸ் கிளேசர் என்னும் வீரரே இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். வீடியோவைப் பாருங்கள் புரியும். நிஜ ஹீரோக்கள் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள் தான்.

Contact Us