பேருந்தின் மீது மோதிய கார்…. மூடப்பட்ட சாலை…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

கனடாவில் உள்ள ரொறன்ரோ மாகாணத்தில் Wilson Avenue அருகே Champlain Boulevard என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் விபத்து ஒன்று நடந்துள்ளது. அதாவது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த TTC பேருந்தின் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதனால் காரில் இருந்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விபத்து ஏற்பட்ட சாலை தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us