“லண்டன் நகரில் அகதிச்சிறுமியான அமல் பொம்மை!”.. உற்சாகமாக வரவேற்கும் குழந்தைகள்..!!

அகதி குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வாழ்வதால், ஏற்படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 9 வயது கொண்ட சிறுமி போன்ற பொம்மை தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மை சுமார் பதினொன்றரை அடி உயரத்தில் இருக்கிறது.

அமல் என்று பெயரிடப்பட்ட இந்த பொம்மை, கடந்த ஜூலை மாதத்தில் துருக்கியிலிருந்து, 8000 கிலோமீட்டருக்கான பயணத்தை தொடங்கியது. இதனை, பொம்மலாட்ட கலைஞர்கள் 4 பேர் சேர்ந்து இயக்கி வருகிறார்கள். இத்தாலி, பிரான்ஸ், வாடிகன் மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கு சென்ற அமல், தற்போது லண்டன் நகருக்கு சென்றிருக்கிறது. அமலை, குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள்.

Contact Us