பதவியேற்பு விழாவில் பேசிக்கொண்டிருந்த ஆளுநர்.. மேடை ஏறி அடித்த மர்ம நபர்.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் என்ற மாகாணத்தில் அபிதின் கோரம் என்பவர் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்பு விழாவின் போது மேடையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று மர்மநபர் ஒருவர் மேடை மீது ஏறி ஆளுநர் தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்திருக்கிறார்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்பு உடனடியாக, அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், ஆளுநரை தாக்கியவர் அயுப் அலிசாதே என்று தெரியவந்திருக்கிறது. அவர் திடீரென்று ஆளுநரை தாக்க காரணம் என்ன? என்று தெரியவில்லை. எனினும் அவரது மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டதில் அவர் கோபமடைந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Contact Us