இனி டிவி சேனலில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்ப தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

டிவி சேனல்கள் இனி கட்டிப்பிடிப்பது, வருடுவது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று பாகிஸ்தான் மின்னணு ஊடகம் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. நாடகங்கள் மற்றும் சீரியல்களில் இப்போதெல்லாம் கிளாமர் காட்சிகள் அதிகமாக வருகின்றன. அது காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த பிரச்சனை பாகிஸ்தான் சீரியல்களுக்கும் பொதுவானது. இனி இதுபோன்ற கட்டிப்பிடிக்கும் மற்றும் காதல் ரசம் சொட்ட சொட்ட வருடுவது, படுக்கையறை காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு கூடாது என்று பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் கண்ணியம் குறைவான காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அநாகரீகமான ஆடை அணிதல், படுக்கை அறை காட்சிகள், சைகைகள் மற்றும் அரவணைத்தல் போன்ற காட்சிகள் ஒருபோதும் இடம் பெறக் கூடாது. இதனை மீறி ஒளிபரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு டிவி சேனல்கள் தங்களின் கண்டெண்ட்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Contact Us