‘வயிற்றுவலி தான் போனேன்’…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி…. நிதி திரட்டும் மருத்துவர்கள்….!!

பிரித்தானியாவில் உள்ள Merseyside நகரில் Litherland பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Abby Younis என்பவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர் நிதி ஆலோசகராக பணி புரிகிறார். இந்த நிலையில் இவ்வாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய உடலில் ஒருவித மாற்றத்தை Abby உணர்ந்துள்ளார். இதனால் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பொழுது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “எனது பணிசுமை காரணமாக ஒற்றைத் தலைவலியும் சோர்வும் ஏற்பட்டது. இதனால் ஓய்வு எடுப்பதற்காக நேரம் ஒதுக்கி என் குடும்பத்தாருடன் விடுமுறையை கழித்தேன். மேலும் உடற்பயிற்சி செய்தும் எனது உடல் எடை அதிகரித்துக்கொண்டே சென்றது. என்னால் சரியாக சுவாசிக்க இயலவில்லை. அதிலும் விடுமுறை முடிந்த பிறகு என் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எனக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. குறிப்பாக ஒரு சில நேரங்களில் என்னால் நகரக் கூட முடியாமல் போனது.

இறுதியில் நான் மருத்துவரை பார்க்க முடிவு செய்தேன். இதனை அடுத்து ராயல் லிவர்பூல் யூனிவர்சிட்டி மருத்துவனைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறினார்கள். இதனை தொடர்ந்து நான் லிவர்பூல் மகளிர் மருத்துவமனை மற்றும் Clatterbridge Centreக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு எனக்கு எடுக்கப்பட்ட CT ஸ்கேனில் நுரையீரல் எம்போலிசம் இருப்பது தெரிய வந்தது. அதாவது நுரையீரலில் உள்ள ஒரு தமனி அடைப்பின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

மேலும் எனக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையின் வாயிலாக வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர். ஆனால் அதனை உறுதி செய்வதற்கு ஒரே வழி அறுவை சிகிச்சை. ஆகவே அதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் எனக்கு மூன்று வாரங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.

அப்போது மருத்துவர்கள் என்னுடைய வயிற்றில் இரண்டு வெவ்வேறு புற்றுநோய்கள் இருப்பதாக கூறியதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அதனை நல்ல வேளையாக அகற்றி விட்டனர். இருப்பினும் அறுவை சிகிச்சையை தொடர்ந்து எதிர்காலத்தில் புற்றுநோய் மீண்டும் வராமல் இருப்பதற்காக கீமோதெரபி அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு நான் மறந்துவிட்டேன்.

மேலும் அறுவைச் சிகிச்சையின் காரணமாக மாதவிடாய் போன்றவற்றில் பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருப்பதற்காக புதிய லேசர் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான கருவிகளை வாங்குவதற்காக லிவர்பூல் மகளிர் மருத்துவமனை நிதி திரட்டி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த சிகிச்சையானது தனிப்பட்ட முறையில் மட்டுமே நடக்கிறது. அதிலும் இவர் NHS-ல் சிகிச்சை பெறுவதற்காக தன்னால் முடிந்த அளவில் நிதியை திரட்டி வருகிறார்.

Contact Us