இனி பிரித்தானியாவிலும் இப்படிதான்..! சிறை போல் மாறும் புலம்பெயர்வோர் முகாம்கள்… வெளியான அச்சுறுத்தும் தகவல்..!!

கிரீஸ் தீவுகளில் ஒன்றான சாமோஸ் தீவில் புலம்பெயர்வோர்க்கு அமைக்கப்பட்டுள்ள முகமானது ஒரு பயங்கர சிறை போல் உள்ளதாம். அதாவது உணவு நேரத்தை அறிவிக்கும் வகையில் ஒலிப்பெருக்கிகள், வேறு இடத்திற்கு நகர கட்டிடங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூர்மையான முள்வேலி, கட்டிடங்களை சுற்றிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் என அந்த முகாம் பயங்கரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த முகாமிலிருந்து தப்பி செல்வது என்பது இயலாத காரியம் என்றே கூறப்படுகிறது.

அப்படியே முகாமில் இருந்து வெளியே செல்ல நினைப்பவர்கள் கைரேகையை பதிவு செய்திருந்தால் மட்டுமே செல்ல இயலும். அதோடு மட்டுமில்லாமல் அந்த முகாமில் உள்ள அதிகாரிகள், அங்கிருக்கும் அகதிகளால் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமா அல்லது அங்கிருப்பவர்கள் தீவிரவாதிகளா என்பதனை சோதிக்கும் வகையில் அங்கு தினசரி கேள்விகளும் கேட்கின்றனர். அதே சமயம் முகாமில் உள்ள அகதிகள் சரியாக இருக்கிறார்களா என்பதனை கண்காணிப்பதற்காக எண்ணிக்கை சரி பார்ப்பும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த முகாமினை பிரித்தானிய உள்த்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். ஏற்கனவே பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் புலம்பெயர்வோர் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டிருந்த நிலையில் கிரீஸில் உள்ள அந்த முகாமை போலவே பிரித்தானியாவிலும் அமைக்க பார்வையிட சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வருங்காலத்தில் பிரித்தானியாவிலும் இதேபோல் பயங்கரமான முகாம்கள் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Contact Us