அச்சுறுத்தும் த்ரில்லர் கேம்… வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் கபே… பிரபல நாட்டில் புதிய முயற்சி..!!

இந்தோனேஷியாவில் ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி கபே ஒன்று வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அந்த கபே ஸ்குவிட் கேம் சீரிஸை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் வகையில் அச்சுறுத்தும் முகமூடி அணிந்த பாதுகாவலர்கள் சிலர் நியான் விளக்குகள் கொண்ட அறையில் துப்பாக்கிகளை பிடித்தபடி அறைக்குள் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு செல்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அந்த அறைக்குள் கட்டளைகளின் ஒலியை கேட்டு விளையாட்டில் முழுமையாக மூழ்கி அனுபவிக்கும் வகையில் கபே அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த கபேயின் உரிமையாளர் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த புதிய முயற்சியின் விளைவாக வாடிக்கையாளர்கள் பலரும் தங்களை தேடி வருவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Contact Us