தண்ணீரில் விஷம் கலந்து பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

தண்ணீரில் விஷம் கலந்து நான்கு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார் தந்தை. நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிர் இழந்து விட்டதால் மனமுடைந்து இச்செயலை செய்திருக்கிறார் என்று அப்பகுதியினர் சோகத்துடன் சொல்லி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 19 வயதில் சவுமியா என்ற மகளும், 16 வயதில் சுவேதா என்ற மகளும் , பதினோரு வயதில் சாக்சி என்ற மகளும், எட்டு வயதில் சூர்ஜன் என்ற மகனும் இருந்தனர்.

ஜெயஸ்ரீ கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்து வந்துவிட்டாலும் அதன் பின்னர் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி அதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் பெரும் துக்கத்தில் இருந்திருக்கிறார் கோபால் மனைவி. இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகவும் மனமுடைந்து இருந்திருக்கிறார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.

அதற்கு முன்பாக பிள்ளைகளை கொன்று விட்டு தானும் தண்ணீர் குடித்துதற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார். தனக்கு பின்னால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று நினைத்து அவர் தண்ணீரில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுவிட்டு தானும் அந்த தண்ணீரை தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார் என்று சண்டேஸ்வரர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . சங்கேஷ்வர் போலீசார் மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

நேற்று காலை இவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப் படாமல் இருக்கவும் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஜன்னலை திறந்து பார்த்திருக்கிறார் அப்போது ஐந்து பேரும் நிறைய தள்ளிய நிலையில் பிணமாக கிடந்த இருக்கிறார்கள் இது எடுத்து சண்டேஸ்வரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

கோபால் வீட்டை ஆய்வு செய்ததில் ஒரு கடிதமும் அதன் மேல் 20 ஆயிரம் பணமும் இருந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் இந்த 20 ஆயிரம் ரூபாயை பணத்தை வைத்துக் கொண்டு எங்கள் இறுதிச் சடங்கை நடத்த வேண்டும். உங்களை அடக்கம் செய்வதற்கு நன்று என்று எழுதப்பட்டு இருந்திருக்கிறது.

Contact Us