மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்… சிறுமியிடம் அத்துமீறிய 40 பேர் மீது பாய்ந்தது போக்சோ!

புதுச்சேரி என்றாலே சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் என்றே அனைவருக்கும் நியாபகம் வரும். இந்த சுற்றுலாவை வைத்து பல்வேறு வியாபாரங்காள் படுஜோராக நடந்துகொண்டிருக்கின்றன. நல்வழி மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளின் ஆசைக்கிணங்க தீயவழிகளிலும் பணம் சம்பாதிக்கின்றனர் சிலர். அதில் ஒன்று மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்துவது. இந்தத் தொழிலில் வெளிமாநிலப் பெண்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் பெண்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த விவகாரம் இப்போது தான் புதுச்சேரி போலீஸாருக்கு தெரியவந்துள்ளதாம்.

இதனால் ரகசிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்ணாநகர் பகுதியிலுள்ள அழகு நிலையத்தில் சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர். அழகுக் கலை பயிற்சிக்கு வந்த அச்சிறுமியை ஸ்பா உரிமையாளர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்பேரில் அச்சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

40 பேர் வரை ஸ்பாவில் தன்னிடம் பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். நகராட்சி மூலம் ஸ்பாவுக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்தும் செய்துள்ளனர். மேலும் பலரின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பட்டியல், செல்போன் எண்களைக் கொண்டு அச்சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது யார், யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us