ஹீத் ரூ லாரியில் மீண்டும் அடைக்கப்பட்ட அகதிகள் கண்டு பிடிப்பு- நல்ல வேளை எவரும் சாகவில்லை !

கடந்த வருடம் மூடிய லாரி ஒன்றில் அகதிகளாக லண்டனுக்கு வர முற்பட்ட பல வியட்நாமிய அகதிகள் இறந்த சம்பவம் நினைவில் இருக்கும். அந்த வகையில் நேற்றைய தினம்(24) ஹீத் ரூ விமான நிலையத்திற்கு அருகே ஒரு லாரியை பொலிசார் சந்தேகத்தின் பேரில் மறித்தார்கள். அதன் பின் புறத்தை திறந்தவேளை, அதில் பல அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விடையம் தெரிய வந்துள்ளது. இதில் சிறுவர்களும் சிறுமிகளும் அடங்குகிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சியான விடையம். வீடியோ இணைப்பு. இந்த மாதம் மட்டும் 19,000 ஆயிரம் அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு படகில் மற்றும், லாரிகளில் வந்து இறங்கியுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Contact Us