மினிமம் சலரியை £9.45 ஆக உயர்த்திய ரிஷி- மகளின் ஹீரோ போல அவரை கொண்டாடுகிறார்கள் ?

பிரித்தானியாவில் தற்போது 23 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவரின், மணித்தியால சம்பளமாக 8.91 பவுண்டுகள் கொடுக்கப்படுகிறது. இதனை 9.45 ஆக உயர்த்த பிரித்தானிய திறைசேரி அமைச்சர் ரிஷி சுண்ணக் முடிவெடுத்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி. மக்களை குஷிப்படுத்தி உள்ளது. பல மாதங்களாக இந்த அறிவிப்புக்கு தான் மக்கள், காத்திருந்தார்கள். இதனூடாக மணித்தியாலம் ஒன்றுக்கு 0.54 பென்ஸ்சால் அனைவரது சம்பளமும் கூட உள்ளது. எனவே ஒரு வருடத்திற்கு சராசரியாக 1,000 பவுண்டுகள் வரை சம்பளம் உயரும். மேலும் கொரோனா கால கட்டத்தில், சில ஊழியர்களின் சம்பளத்தை கூட்ட முடியாதவாறு, தடை போடப் பட்டு இருந்தது. அந்த ..

தடையையும் வில்க்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை பாராளுமன்றில் ரிஷி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்கப்படுகிறது. மேலும் சொல்லப் போனால், இந்தியாவில் கொடி கட்டிப் பறக்கும் இன்போஃசிஸ் நிறுவனத்தின், உரிமையாளரின் மகளை தான் ரிஷி திருமணம் முடித்துள்ளார். அம்பானி ரேஞ்சுக்கு மிகப் பெரிய செல்வந்தர் இன்போஃசிஸ் நிறுவன உரிமையாளர் என்பது பலர் அறிந்த விடையம். இந்திய வம்சாவழியில் வந்தவரான ரிஷி சுண்ணக்கிற்கு தற்போது பிரித்தானியாவில் பெரும் செல்வாக்கு பெருகி வருவதோடு, அவரே அடுத்த பிரதமர் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

Contact Us