ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இராணுவம்…. பிரதமர் சிறைபிடிப்பு…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

 

வட ஆப்பிரிக்காவின் சூடானில் 30 ஆன்டுகளாக ஆட்சி புரிந்த ஒமர் அல்-பஷீர் மக்கள் போராட்டம் மற்றும் இராணுவ கிளர்ச்சியால் கடந்த 2019 இல் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்த கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் சூடான் நாட்டில் அப்துல்லா ஹம்டோ அவர்கள் புதிய பிரதமராக ஆட்சி புரிந்து வருகிறார்.

ஆனால், இராணுவம் தற்போது மொத்த நாட்டையும் ஆள வேண்டி, ஆட்சியை முழுமையாக கைப்பற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில், இன்று கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவ படையினர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத்துழைக்காத, பிரதமர் அப்துல்லா ஹம்டோவை இராணுவம் சிறைபிடித்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அமைச்சர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களையும் இராணுவம் சிறைபிடித்துள்ளது.

தற்போது இந்த நடவடிக்கைகளால், அந்நாட்டு மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதன் காரணமாக, சூடானில் இணையதள சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் தலைநகரான ஹர்டோமுக்கு செல்லும் போக்குவரத்து சாலைகளும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது, இராணுவத்தினர் நடத்திய இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் சூடானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.

Contact Us