சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா…. கடலில் விழுந்த 3 பெண்கள்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

 

துருக்கியின் தென்மேற்கு கடலோரே பகுதியில் Oludeniz என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் 21 ஆவது சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா நடைபெறுகிறது. மேலும் 5 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஏராளமானோர் பாராகிளைடிங் செய்தனர்.

இந்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த 3 பெண்கள் எதிர்பாராதவிதமாக ஒருவரோடு ஒருவர் மோதி தங்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். இதில் முதலாவதாக, Cagdas Turkmen (42) என்பவர் தான் Ibrahim Kars(40) மற்றும் Murat Can Sak(25) ஆகிய இருவரின் மீதும் மோதியுள்ளார். இதனால் மூவரும் நிலைதடுமாறி உள்ளனர்.

பின்னர் மூவரின் பாராசூட்களும் சிக்கியதால், சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து கடலில் விழுந்தனர். இதனை தொடர்ந்து கடலில் விழுந்த மூவரையும் கடற்படையினர் மீட்டனர். இந்த, விபத்தில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Contact Us