“இப்படி ஒரு பொழுதுபோக்கா”..? 33 வருடங்களாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் நபர்!”.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்..!!

 

லண்டனைச் சேர்ந்த 55 வயதுடைய ஸ்டீவ் லுட்வின் என்பவர் பாம்புகளின் விஷத்தை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்தி வலியை ஏற்படுத்துவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். உலகின் ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக பாம்பு கடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்காக மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்வதாக கூறுகிறார்.

கடந்த 33 வருடங்களாக, பத்து நாட்களுக்கு ஒரு தடவை இவ்வாறு பாம்பின் விஷத்தை தன் உடலுக்குள் ஊசியால் செலுத்தி வருகிறார். மேலும், தன் பொழுதுபோக்கிற்காக நாகபாம்புகளையும், ராட்டில்ஸ்னேக்ஸ் உட்பட சுமார் 33 விஷப்பாம்புகளையும் தன் வீட்டின் அறை ஒன்றில், வைத்திருக்கிறார்.

ஸ்டீவ் லுட்வின், பள்ளி படிப்பை முடித்துவிட்டு, லண்டனில் மிருகக்காட்சி சாலைகளுக்கு விலங்குகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அப்போதிலிருந்து தான் அவருக்கு பாம்பு விஷங்கள் மீது ஆர்வம் வந்திருக்கிறது.

Contact Us