பிரபல நாட்டில் குண்டுவீச்சு…. நூற்றுக்கணக்கானோர் பலி…. தகவல் வெளியிட்ட ராணுவம்….!!

 

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதனால் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இணைந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த போர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஏமன் நாட்டின் மாரிப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், மாரிப் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி படை போர் விமானங்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

அதோடு, கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி செல்வதையும் இந்த தாக்குதல் தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களில் மட்டும் அரசுப்படை நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தகவல்களை அந்நாட்டின் உள்ளூர் ராணுவம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Contact Us