உலகிலேயே அதிகளவு ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய திட்டம்.. -சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர்..!!

 

சவுதி அரேபியாவின் எரிசக்திக்கான அமைச்சர் சல்மான் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியில் முதல் நாடாக திகழ்கிறது. சூரிய ஒளியையும், காற்றையும் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதிகமாக உற்பத்தி செய்கிறது. எனவே, சவுதி அரேபியா, உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம்.

உலக நாடுகள் அனைத்திற்கும் ஹைட்ரஜனை அதிக அளவு வழங்க விரும்புகிறோம். சவுதி அரேபியா, அனைத்து நாடுகளுக்கும் ஆற்றலை அளிப்பதில் உறுதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சவுதி அரேபியாவில் கடந்த 1938 ஆம் வருடத்தில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது.

அப்போதிலிருந்து, உலக அளவில் பொருளாதாரத்தில் முக்கிய நாடாக சவுதி அரேபியா உள்ளது. இந்நாட்டிற்கான பொருளாதாரம், மொத்தமாக கச்சா எண்ணெயை சார்ந்து தான் உள்ளது. ஆனால் தற்போது, மின்சார வாகனங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் சவுதி அரேபியா, தன் பொருளாதாரத்திற்கு அதிக நாட்களுக்கு கச்சா எண்ணெயை மட்டும் நம்பியிருக்க முடியாது.

எனவே, கச்சா எண்ணெயை தவிர்த்து வேறு வழிகளிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சவுதி அரேபியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us