கணவன் பணத்தில் கனடா பயணம்…. 19 லட்சம் மோசடி செய்துவிட்டார்…. மாமனார் அளித்த புகார்….!!

 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த நரிந்தர்பால் சிங் என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு எனது மகன் ஹர்மன்பிரீத் சிங், ரந்தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னை கனடாவுக்கு அனுப்புமாறு கூறிய ரந்தீப் அங்கு சென்றவுடன் ஹர்மன்பிரீத்தை spouse விசாவில் அழைத்து வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து எனது மகன் ரன்தீப்பை ரூ.19 லட்சம் செலவு செய்து கனடாவுக்கு அனுப்பிவைத்தார். இதன்பின்னர் ரந்தீப் எங்களைப் புறக்கணித்து, கெட்ட வார்த்தைகளால் பேச ஆரம்பித்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அறியப்படுகிறது.

Contact Us