உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. குலுங்கிய கட்டிடங்கள்…. படுகாயமடைந்த பெண்….!!

 

தைவானின் தலைநகரான தைபேயில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இலன் அருகில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சில நொடிகளில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  அதிலும் இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மலைப்பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக பாறைகள் சரிந்து விழுந்தன. அப்பொழுது அந்த வழியாக ஒரு பெண் காரை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் பாறையானது கார் மீது விழுந்ததால் அப்பெண் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Contact Us