“ஒண்ணுக்கு போன இடத்திலேயே மண்ணுக்குள் போக வைத்து .. ” -வாலிபருக்கு நடுரோட்டில் நடந்த கொடுமை

 

உத்தரகண்டில் உள்ள டேராடூனின் ராஜ்புட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு, நிதின் குமார் லோஹன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வந்தார்.அந்த கடையை புனீத் கரோலா என்பவர் பல வருடமாக நடத்தி வந்தார்.
கடந்த வாரம் அந்த கடையில் கான்ஸ்டபிள் நிதின் சில பொருட்களை வாங்கிவிட்டு ,அந்த கடையின் ஓரத்தில் சிறுநீர் கழித்தார் .அப்போது அந்த கடையினை நடத்தி வரும் புனித் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் .ஆனால் அந்த நிதின் அதை பொருட்படுத்தமால் சிறுநீர் கழித்து விட்டு வந்தார் .அப்போது இதனால் கடுப்பான புனித் அவரோடு எதனால் இப்படி பொது இடத்தில் எங்களின் கடைக்கு அருகே சிறுநீர் கழித்தாய் என்று கேட்டு சண்டை போட்டார் .அதனால் கோபமுற்ற அந்த நிதின் எதிர்பாராவிதமாக தன்னிடமிருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து அந்த புனித்தினை சுட்டார் .இந்த துப்பாக்கி சூட்டில் அங்கேயே அந்த புனித் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்து இறந்தார் .அதன் பிறகு இந்த சம்பவம பற்றி தகவலறிந்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து ,அந்த கான்ஸ்ட்டபிள் நிதினை கைது செய்தனர் .பின்னர் அவரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர் .

Contact Us