“ஐயோ என் புருஷன் ஊசி எடுத்திட்டு வரார் ” -அடுத்து மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி

 

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகா ராமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான சன்னேசப்பா ஒரு டாக்டராக பணியாற்றுகிறார் . இவரது மனைவி36 வயதான சில்பா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. . திருமணத்திற்கு பிறகு அவர்களது 2 பிள்ளைகளும் தாவணகெரேவில் வசித்து வந்தனர்

இந்த நிலையில் அந்த டாக்டர் கடந்த பல மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். மேலும் மது, சூதாட்டம் போன்றவற்றிற்கும் அடிமையானார் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் மனைவி ஷில்பாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது .அப்போது அந்த கணவர் அந்த மனைவியை ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டி போகாமலே தானே சிகிச்சையளிப்பதாக கூறி அடிக்கடி ஒரு ஊசி போட்டார் .அந்த ஊசி போட்டதும் அந்த ஷில்பா மயக்கமாகி பின் இறந்தார் .உடனே அந்த அந்த பெண்ணின் பெற்றோர் தகவல் அறிந்து மகளை பார்க்க வந்தனர் .அப்போது அவர் கணவர் செலுத்திய ஊசியால் மகள் இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகமடைந்து போலீசில் புகாரளித்தனர் .போலீசார் அந்த டாக்டரை பிடித்து விசாரித்த போது அவர் மனைவியை ஒரு மருந்தை அதிகமாக ஊசியில் செலுத்தி கொன்றதை ஒப்புக்கொண்டார் .பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர் .

Contact Us