“உறவு முடிஞ்சதும் உயிரை எடுத்திடுவோம்” -பலான பெண்களை எதுக்காக கொலை செஞ்சாங்க தெரியுமா?

 

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வசிக்கும் பான்டாவுக்கும் அவரது மனைவி மம்தாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இப்போது அவர்கள் குழந்தை பெற ஆசைப்பட்டதால் அவரின் நண்பர் நீரஜ்ஜிடம் அதற்கு வழி செய்யுமாறு கேட்டனர் .அப்போது அந்த நீரஜ் அவர்களை ஓர் சாமியாரிடம் கூட்டி சென்றார் .அந்த சாமியார் அவர்களிடம் ஒரு பெண்ணை நரபலி கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்று கூறி ,உடனே ஒரு பெண்ணை அழைத்து வர சொன்னார் .
அதனால் அந்த நீரஜ் கடந்த 13ம் தேதி ஒரு பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணோடு உறவு கொண்டு அவரை கொலை செய்து விட்டு அவரின் பிணத்தை தூக்கி வந்தார் .அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அந்த சாமியார் அந்த பெண்னின் பிணத்தை பூஜைக்கு ஏற்க மறுத்தார் .அதனால் அவர் கடந்த 20ம் தேதி வேறொரு பாலியல் பெண்ணை கொலை செய்து தூக்கி வந்தார் .அப்போது வரும் வழியில் அந்த பெண்ணின் பிணம் சாலையில் விழுந்து விட்டதால் ,அங்கு கூட்டம் கூடியது .அதனால் அவர் அந்த பிணத்தை சாலையில் போட்டு விட்டு ஓடி விட்டார் .பின்னர் போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை மேகொண்டனர் .அப்போது இந்த நரபலி கொலையில் ஈடுபட்ட சாமியார் கிரிவார் யாதவ் , பந்து பதவுரியா, அவரது மனைவி மம்தா, அவரது சகோதரி மீரா ரஜவத் மற்றும் அவரது நண்பர் நீரஜ் பர்மார் ஆகியோரை கைது செய்தனர்

Contact Us