போலி துப்பாக்கி ஆனால் உண்மையான குண்டு: ஹூட்டிங் எடுக்கும் போது பலியான பெண் கமரா காரர் !

படப்பிடிப்பின்போது, துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியில் அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுட்டபோது எதிர்பாரா விதமாக குண்டு பாய, படத்தின் ஒளிப்பதிவாளர் உயிரிழக்க நேரிட, இயக்குநர் படுகாயமடைந்துள்ளார். உலகையே புரட்டிப் போட்ட சம்பவமாக மீடியாக்களில் இது முன் இடத்தைப் பிடித்துள்ளது. ஹாலிவுட் நடிகரான அலெக் பால்ட்வின், இயக்குநர் ஜோயல் ஜோஷா இயக்கும் `ரஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியில் அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுட்டபோது எதிர்பாராத விதமாக குண்டு பாய, படத்தின் ஒளிப்பதிவாளர் உயிரிழக்க நேரிட, இயக்குநர் படுகாயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.`ரஸ்ட்’ என்ற படத்தை இயக்குநர் ஜோயல் ஜோஷா இயக்கி வருகிறார். இதில் பிரபல ஹாலிவுட் நடிகரான அலெக் பால்ட்வின் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மெக்ஸிகோவில் உள்ள சாண்ட்பே என்ற இடத்தில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் துப்பாக்கியில் சுடும் காட்சியில், போலியான துப்பாக்கியால் சுடுவதை போன்று படம்பிடித்துக் கொண்டிருக்கையில், நிஜமாகவே அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியது. இதில் இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்ஸின்ஸ் மீது குண்டு பாய்ந்தது. உடனடியாக ஹெலிகாப்டரின் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் இதில் இயக்குநர் ஜோயல் ஜோஷாவும் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர், இதை விபத்தாகவே பதிவு செய்துள்ளனர். மேலும் `ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் படக் குழுவினர். தொடர்ந்து, இந்த விபத்துக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அலெக் பால்ட்வின், இந்தச் சம்பவம் தனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஷன் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், காவல்துறையினரின் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் மனரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அலெக் பால்ட்வின், தனது அனைத்துப் படங்களின் படப்பிடிப்பையும் ரத்து செய்துள்ளதாகவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Contact Us