தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நபர்களை தனியாக அழைத்து விஜய் என்ன செய்தார் தெரியுமா ?

சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் கிராம வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மற்ற அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தனர். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் விஜய் இவர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தளபதி மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் செய்வார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அரசியலே வேண்டாம் என்று அடிக்கடி கூறி வரும் நம்ம விஜய்யா இது ? சொல்லவே இல்ல இப்படி எல்லாம் மாறீட்டாரே ? அடுத்த என்ன ரகசிய திட்டம் என்பது தெரியவில்லை. தமிழ் நாட்டில் இனி பெரும் சல சலப்புக்கு இடம் இருக்கு போல இருக்கே ?

Contact Us