ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 

வட ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2019 ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், புதிய ஆட்சி அமைப்பதில் இராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, 2023 இல் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கவும், அதுவரை அப்துல்லா ஹம்தக் இடைக்கால ஆட்சி செய்தார். இந்த நிலையில் நேற்று இராணுவம், ஆட்சி கவழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு, பிரதமர் மற்றும் அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால், நாடு முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதன் மூலம் இராணுவம் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டு ஊடங்கங்களில், தேச பக்தி பாடல்களும், நைல் நதியும் மட்டுமே ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது சூடானில் அவசரநிலை பிரகடனப்படுத்துவதாக இடைக்கால இராணுவ தலைவர், ஜெனரல் அப்தல் பட்டா பர்கான் நேற்று பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, “அரசியல் பிரிவுகளுக்கு இடையே உள்ள சண்டைதான் இராணுவத்தை தலையிட தூண்டியது. எனவே, ஆளும் கவுன்சில் மற்றும் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் தலைமையின் அரசை கலைக்கிறேன். இதனால், புதிய தொழில்நுட்ப அரசாங்கம் மீண்டும் தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வரும்” என்றார். மேலும் சூடானில் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் கண்ணீர் புகை குண்டு வீசி நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானதோடு, 80 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Contact Us