“துபாயில் ஓட்டுனருக்கு அடித்த அதிர்ஷ்டம்!”.. நெகிழ்ச்சியில் பாகிஸ்தான் குடும்பத்தினர்..!!

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் Junaid Rana என்பவர், சமீபத்தில் Mahzooz என்ற இணையதள குலுக்களில் 50 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகை பெற்றிருக்கிறார். இவருக்கு மனைவியும் ஆண் குழந்தைகள் இருவரும் இருக்கிறார்கள். பாகிஸ்தான் வம்சாவளியினரான இவரின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் இறுதி நேரத்தில் தான் அதை வாங்கினேன். நான் எனக்கான எண்களை, கண்களை மூடியவாறு தான் தேர்ந்தெடுத்தேன். நான் ஒருபோதும் விலை அதிகமுள்ள பொருட்களுக்கு ஆசைப்பட்டதில்லை. இந்த பரிசுத்தொகையை நான் வென்ற போது மகிழ்ச்சியடைந்தேனே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

பாகிஸ்தானில் நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். கடந்த சனிக்கிழமை அன்று என் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியபோது என் மனைவி தொழுகை செய்து கொண்டிருப்பதாக என் சகோதரி கூறினார். எனவே நான் பரிசுத்தொகையை வெல்ல வேண்டுமென்று தொழுகை செய்ய சொல்லுமாறு சகோதரியிடம் கூறினேன்.

என் மனைவியின் பிரார்த்தனையினால் இந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கலாம். எனக்கும் என் சகோதரருக்கும் கடன் இருக்கிறது. அந்த கடனை அடைத்த பின்பு, பாகிஸ்தானிலும், துபாயிலும் வீடு வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் மாத சம்பளமாக 6,000 திர்ஹாம் தான் பெற்று வந்திருக்கிறார். தற்போது இவர் கோடீஸ்வரராக மாறியது, அவரின் குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Contact Us