“தலீபான்களை சந்திக்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!”.. வெளியான தகவல்..!!

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான வாங் வென்பின் பத்திரிகையாளர்களிடம் நேற்று தெரிவித்திருப்பதாவது, வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யீ, கத்தாருக்கு இரண்டு நாட்கள் பயணமாக சென்றிருக்கிறார். அப்போது தலிபான்களின் தலைவர்களை அவர் சந்தித்து பேசவுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பான கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் இடைக்கால ஆட்சி அமைக்கும் முன்பு கடந்த ஜூலை மாதத்திலேயே, தலிபான்களின் தலைவர் அப்துல் கனி பரதரை சீனாவில் வாங் யீ சந்தித்திருந்தார்.

சீனா, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால ஆட்சி அமைத்ததற்கு ஆதரவு அளித்து வருகிறது. மேலும் உலக நாடுகளும் அந்நாட்டிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us