‘ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது’…. 50 ஆண்டுகள் நிறைவு…. மாநாட்டில் பேசிய சீன அதிபர்….!!

7

 

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மைகாலமாக மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இது எப்போதும் இல்லாத வகையில் தற்போது அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வில் சீனாவின் சட்டபூர்வமான இருக்கை மீட்டெடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததைக் குறிக்கும் விதமாக மாநாடு ஒன்று நடந்தது.

அதில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது “ஐ.நா சபையின் அதிகாரத்தையும் நிலைப்பாட்டையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதிலும் சர்வதேச விதிகளை ஐ.நா.வின் 193 நாடுகள் மட்டுமே இணைந்து உருவாக்க இயலும். இதனை தவிர்த்து மற்ற தனிப்பட்ட நாடுகள் அல்லது கூட்டங்களால் தீர்மானிக்க முடியாது.

ஐ.நா.வின் அதிகாரம் மற்றும் புனிதத்தையும் சீன மக்கள் நிலை நிறுத்துவார்கள். மேலும் சீனாவின் ஒத்துழைப்பு கடந்த 50 ஆண்டுகளாக ஐ.நா.வுடன் சீராகவும் ஆழமாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்காவை மறைமுகமாக அதிபர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us