பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்…. ஐநா எச்சரிக்கை…. எங்கு தெரியுமா?….!!!

 

ஆப்கானிஸ்தான் வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் பசியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஐநா சபையின் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறுகையில், ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக 14 மில்லியன் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர்.

இதனால் குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள். சூழல் மிகவும் மோசமாகப் போகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு உலக நாடுகளில் இருந்து வந்த பல நிதி பங்களிப்புகள் நின்று போனதால் அந்த நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. யாரும் எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது. ஆப்கன் நிர்வாகம் நிதிகளை திறந்துவிட வேண்டும். அப்போது தான் மக்கள் உயிர் வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Contact Us