பிரபல விமான நிலையத்தில்…. பதுங்கியிருந்த 13 புலம்பெயர்ந்தவர்கள்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

 

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள லாரிகளில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள லாரி ஒன்றின் பின்புறம் திறந்து பார்த்தபோது, அதனுள் சந்தேகிக்கும் வகையில் உள்ள புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, லாரியின் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த லாரியில் ஒரு குழந்தை உட்பட 13 புலம்பெயர்ந்தோர் குழு இருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை பிரபல ஊடகம் வெளியிட்டது. இந்த சம்பவம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத விமான நிலைய அதிகாரி ஒருவை அளித்த பேட்டியில் கூறியதாவது, “உண்மையில் இந்த காட்சியை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இந்த குழுவில் 2 முதல் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் உள்ளனர்” என்று கூறினார்.

மேலும் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரத்தில், இந்த ஆண்டு மட்டும் சுமார் 19,533 புலம்பெயர்ந்தோர் படகு மற்று வேறு வழிகள் மூலம் பிரித்தானியா வந்து சேர்ந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது புலம்பெயர்ந்தோர் எப்படி விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் லாரிக்குள் வந்தனர் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுனரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அதன் பின்னரே முழு விபரங்களும் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Contact Us