“ஏண்டி என் போனை நோண்டுறே “- மனைவியால் காண்டான கணவன் என்ன செஞ்சார் தெரியுமா ?

 

குஜராத்தின் வதோதராவில் ஒரு கணவன் மனைவி வசித்து வந்தனர் .அவர்கள் இருவருமே தனித்தனியாக சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் வைத்துள்ளனர் .இந்நிலையில் ஒரு நாள் அந்த கணவனின் போனை அந்த மனைவி கணவனில்லாத நேரத்தில் ஓபன் செய்து பார்த்தார் .அப்போது அவரின் சமூக ஊடக கணக்கை அவர் பார்த்த போது அவரின் போட்டோவுக்கு பல பெண்கள் லைக்ஸ் கொடுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சியானார் .மேலும் இவ்ளோ லைக்ஸ் வந்துள்ளதை கண்டும் ,கண்ட பெண்களோடு அவர் தொடர்பில் இருப்பதை பார்த்தும் அவர் பொறாமையால் பொங்கினார் .
அதன் பிறகு தன்னுடைய கணவர் வீட்டுக்கு வந்ததும் இது பற்றி கேட்டு சண்டை போட்டார் .அதை கேட்டு கோவமான அந்த கணவன், தான் இல்லாத நேரத்தில் தனது போனை எதற்கு எடுத்து தனது ஊடக கணக்கை பார்த்தாய் என்று கேட்டு மனைவியிடம் சண்டை போட்டார் .பிறகு அவர்களுக்குள் இந்த விஷயமாக தகராறு முற்றியதும் அந்த கணவர் அந்த மனைவியை கடுமையாக தாக்கி காயப்படுத்தினார் .அதனால் அந்த பெண் அங்குள்ள ‘பெண்கள் பாதுகாப்பு உதவி’ போன் நம்பருக்கு போன செய்து தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சினார் .உடனே அந்த பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு வந்து அந்த பெண்ணை அவரின் கணவரிடமிருந்து காப்பாற்றினர் .பின்னர் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது

Contact Us