“டேய்! ரெண்டு உயிர் ஊசலாடிட்டிருக்கு வாங்க ரசிச்சி வீடியோ எடுக்கலாம்” விபத்தில் நடந்த கொடுமை

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் சிவக்குமார் என்ற 30 வயதான நபர் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். அந்த சிவக்குமார் அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்தார்
நேற்று காலை சிவக்குமார் தனது மனைவி, குழந்தையுடன் பைக்கில் கே.ஆர்.புரத்தில் இருந்து சென்று கொண்டு இருந்தார். அவர் மாரத்தஹள்ளி ரிங் ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த டிப்பர் லாரி, அவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் தனது பைக்கில் இருந்து சிவக்குமார், ஸ்ரீதேவி, குழந்தை தீக்‌ஷித் தவறி கீழே விழுந்தனர்.அதன் பிறகு அந்த பெண்ணும் அவரின் குழந்தையும் உயிருக்கு போராடி ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் கிடந்தனர் .அப்போது அந்த கணவர் ரோட்டில் போவோரிடம் மனைவியையும் ,குழந்தையும் காப்பாற்ற உதவுமாறு கெஞ்சினார் .ஆனால் அந்த பொது மக்கள் அவர்களுக்கு உதவாமல் தங்களின் செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் வாங்க அலைந்தனர் .அதன் பிறகு அந்த இரண்டு உயிர்களும் அங்கேயே பறி போனது .பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ,அந்த இரு பிரேதங்களை பைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இப்படி செல்போனால் பொதுமக்களின் மனிதாபிமானம் இல்லாத செயல் பலரை வேதனை படுத்தியுள்ளது.

Contact Us