விசிக பிரமுகர் படுகொலை – சேத்துப்பட்டில் பரபரப்பு!!

 

சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். 50 வயதான இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 107 ஆவது வட்ட செயலாளராக உள்ளார். நேற்றிரவு இளங்கோவன் தனது நண்பன் ஜெயவேலுடன் இளங்கோவன் , சிட்டிபாபு தெருவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் இளங்கோவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்கோவன் மற்றும் சஞ்சய் பிரபு ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சஞ்சய் பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனை வெட்டியது தெரியவந்தது. இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சேத்துப்பட்டு போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Contact Us