“டேய் எங்க மத பெண்ணை காதலிக்காதே ” -மீறி காதலித்ததால் என்னாச்சி பாருங்க

 

கர்நாடகாவின் பெங்களூரு அருகேயுள்ள சிந்துகி தாலுகாவில் ரவி என்ற இந்து மத வாலிபர் வேறு மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்ணும் அவரை காதலித்தார் .இந்த காதல் விவகாரம் அந்த பெண்னின் உறவினர்களுக்கு தெரிய வந்துளளது .அதன் பிறகு அந்த காதலியின் உறவினர்கள் அந்த ரவியிடம் இந்த காதலை கை விடுமாறு எடுத்து கூறினர் .ஆனால் அவர் அந்த காதலியை மறக்காமல் அவரோடு அடிக்கடி பேசி வந்தார் .
இந்நிலையில் அந்த காதலன் ரவியை கொலை செய்ய அந்த பெண்னின் குடும்பத்தினர் முடிவெடுத்தனர் .இந்த விஷயம் அந்த காதலிக்கு தெரிய வந்துள்ளது .அதனால் அவர் அந்த காதலனிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார் .அதன் பிறகு கடந்த வாரம் வியாழக்கிழமை ரவி தனியாக கடைக்கு சென்று விட்டு வரும்போது அந்த பெண்ணின் உறவினர்கள் இருவர் அந்த ரவியை அடித்து உதைத்து கொலை செய்து அவரின் உடலில் அங்குள்ள ஒரு குளத்தில் தூக்கி வீசி விட்டு சென்றனர் .
பின்னர் இந்த கொலை பற்றி அந்த ரவியின் காதலிக்கு தெரிய வந்ததும் அவர் போலீசுக்கு போன் செய்து புகார் கூறினார் .உடனே போலீசார் அந்த பெண்ணின் உறவினர்கள் இருவரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் ரவியை கொலை செய்து பிணத்தைதை குளத்தில் வீசியதை கூறினர் .பின்னர் அவர்களின் உதவியோடு ரவியின் உடலை அந்த குளத்திலிருந்து மீட்டனர் .

Contact Us