செக்ஸ் விளம்பரம் கொடுத்து மாட்டிக் கொண்ட சுதன் உலகநாதன் : லண்டன் மருத்துவர் லீலை …

குரைடனில் வசித்து வரும், சுதன் உலகநாதன் என்னும் 37 வயது மருத்துவர், பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். இவர் கடந்த ஆண்டு தனது வீட்டு கட்டட வேலைக்காக 30 வயதான ஸ்டீபன் ஹே என்னும் நபரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஸ்டீபர் சுதன் உலகநாதனிடம், பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு, வேலையை சரியாக செய்யவில்லை. இன் நிலையில் இருவருக்கும் மத்தியில் பெரும் வாக்கு வாதம் மூண்டுள்ளது. இதனால் வேலையை சரியாக முடித்துக் கொடுக்காமல், ஸ்டீபன் விலகியதாக கூறப்படும் நிலையில். செக்ஸ் இணையம் ஒன்றை தெரிவு செய்த உலகநாதன், அதில் ஸ்டீபனின் தொடர்பு இலக்கத்தை போட்டு, தரவுகளை ஏற்றி அவரை GAY என்றும், தன்னை எவரும் தொடர்பு கொள்ள முடியும் என்று ஸ்டீபன் போல விளம்பரம் ஒன்றை செய்துள்ளார்.

இதனை அடுத்து பல இளைஞர்கள் ஸ்டீபனை தொடர்பு கொண்டு டேட்டிங் செய்ய ஆரம்பித்த நிலையில். இதனை அறிந்து கொண்ட ஸ்டீபன் சுதன் உலகநதனுக்கு எதிராக குரைடனில் வழக்கு பதிவு செய்தார். மேலும் செக்ஸ் இணையத்தில் கட்டணத்தை செலுத்த பாவித்த கடன் அட்டை தொடர்பான பல தகவல்களை, பெற்ற ஸ்டீபன் இவற்றை ஆதாரமாக நீதிமன்றில் சமர்பித்தார். இதனை அடுத்து நீதிபதி சுதன் உலகநாதனுக்கு £2,000 பவுண்டுகள் தண்டப் பணம் அறவிட்டு தீர்பளித்துள்ளதோடு. உலகநாதன் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

சுதன் உலகநாதன் முறைப்படி ஸ்டீபனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர் குறுக்கு வழியில் சென்று. ஒரு நபரை கேவலப்படுத்த முயன்றுள்ளார். இதனால் தற்போது அவரது மருத்துவர் பட்டமும் பறிபோகும் நிலைக்கு தள்ளப் படலாம் என்று, டெயிலி மெயில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Contact Us