1000 கோடிக்கும் மேல்…. லாபம் ஈட்டிய தாய் நிறுவனம்…. கூகுள் வெளியிட்ட காலாண்டு அறிக்கை….!!

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், பல கட்டுப்பாடுகளால் பெரும் அழுத்தத்தை சந்தித்தது. மேலும், ஊரடங்கின் பணிமுறை மாற்றத்திலும், ஆல்பாபெட் நிறுவனம் 1,424 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. கூகுள் நிறுவனத்தின் மையப்புள்ளியாக, யூடியூப், தேடல் இயந்திரம், விளம்பர சந்தை ஆகிய இணைய செயல்பாடுகள் திகழ்கிறது. இந்த வருட காலாண்டில் கூகுள் நிறுவனம் 65.1 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியது கடந்த ஆண்டை விட 41 சதவீதம் அதிகமாகும்.

அதோடு, கூகுளின் இணைய விளம்பர இயந்திரமும், இதர சேவைகளும் பெரிய வளர்ச்சி கண்டதாக டெக் டைட்டன் நிறுவனம் தெரிவித்தது. இதில் மைக்ரோசாப்ட் மற்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட பேஸ்புக்கும் அதிக லாபத்தை ஈட்டியது. இந்த நிலையில் ட்விட்டர் பெரும் இழப்பை சந்திக்க, அந்த நிறுவனத்தின் பங்குதாரர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து கூகுளின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூறுகையில், “எங்களின் முதலீடுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்க உதவுவது இந்த காலாண்டின் முடிவுகள் எடுத்துரைக்கிறது. டிஜிட்டல் மாற்றம் மற்றும் வீட்டிலிருந்தும் பணி முறை தொடர்வதால், எங்களின் கிளவுட் சேவைகள் பிற நிறுவனங்களை ஒத்துழைக்க உதவுகின்றன” என்று கூறினார்.

மேலும் ஆல்பாபெட் வெளியிட்ட அறிக்கையில், “ஜூலை- செப்டம்பர் வரை, இணையத்தில் வீடியோ சேவை மூலம் விளம்பரதாரர்களின் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இலக்கு விற்கப்பட்டது. இதேபோல், கடந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இலக்கு விற்கப்பட்டது” என்று வெளியிட்டது.

Contact Us