“இனி பொறுத்துக்கொள்ள முடியாது அம்மா” வீட்டிற்குள் கிடந்த எலும்புக்கூடு…. பிரபல நாட்டில் திடுக்கிடும் சம்பவம்….!!

அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டில் 15 வயது சிறுவன் ஒருவன் அவசர உதவி கேட்டு காவல்துறையினரை அணுகியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று பார்த்தபோது அங்கு பெற்றோர் இன்றி அநாதரவாக விடப்பட்ட 7, 10 மற்றும் 15 வயதுடைய 3 பிள்ளைகள் தனிமையில் வாழ்ந்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்தபோது ஒரு சிறுவன் இறந்தபடி அவனுடைய உடல் அழுகி எலும்புக்கூடாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இவ்வாறு அந்த வீட்டில் ஒரு சிறுவன் இறந்ததை அடுத்து மற்ற 2 பிள்ளைகள் மோசமான நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்றால் Gloriya Y. Williams என்ற பெண்ணும், அவரது காதலரான Brain W. Coulter என்பவரும் பிள்ளைகளை ஒரு வீட்டில் அநாதரவாக விட்டு விட்டு வேறொரு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பிள்ளைகள் பசி, பட்டினியால் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் Erica Chapman என்ற பெண் அந்த வீட்டில் 15 வயது சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருவதை பார்த்து பசியைப் போக்க அவனுக்கு உணவளித்து வந்துள்ளார்.

அதன்பின் 19 வயது சிறுவன் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் Trevor Thompson என்ற ஒருவரிடம் சென்று மொபைல் சார்ஜ் தர முடியுமா என்று கேட்டு இருக்கின்றான். அந்த சிறுவனை பார்த்ததும் Trevor-க்கு அவன் மீது ஏதோ புரிந்து கொள்ள இயலாத ஒரு பாசம் ஏற்பட, அன்றிலிருந்து அவரும் உணவு கொடுக்கத் துவங்கினார். இவ்வாறு உணவு கொடுத்த இருவருக்கும் அந்த வீட்டில் மேலும் 2 பேர் இருப்பதும், 15 வயது சிறுவன் தனக்கு கிடைத்த உணவை அவர்களுக்கு பகிர்ந்தளித்ததும் தெரியாது. அந்த வீட்டில் இறந்து கிடந்த 8 வயது சிறுவனின் உடற்கூறு ஆய்வில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதைக் காட்டும் வகையில் பல காயங்கள் இருக்கின்றன.

மேலும் அந்த சிறுவன் இறந்து ஓராண்டாவது இருக்கும் என்று கருதப்படுகிறது. இவ்வாறு வீட்டில் சரியான உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் அழகிய ஒரு உடலுடன் பல மாதங்கள் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அந்த 15 வயது சிறுவன் தன் தாயை மொபைலில் அழைத்து போதும் அம்மா இனி எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியதுடன் காவல்துறையினரை உதவிக்கு அழைத்துள்ளான். இதனைத்தொடர்ந்து இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிள்ளது. ஆகவே தற்போது உள்ள குழந்தைகளை காவல்துறையினர் மீட்டு அரசின் பொறுப்பில் வைத்துள்ளனர். அதன்பின் பிள்ளைகள் தனியாக வசிக்கும் வீட்டின் அருகில் வாழ்ந்தும் அவர்களை கவனிக்காத Gloriya மற்றும் Brain மீது கொலை முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us